பிப்ரவரி 2009: குறுக்கெழுத்துப் புதிர்
இந்த 2009ஆம் ஆண்டைச் சிறப்பாகத் தொடங்க வேண்டுமென்று தென்றல் வாசகர்கள் பலரும் நினைத்தார்கள் போலிருக்கிறது. இருபது வாசகர்கள் புதிருக்குச் சரியான விடைகளைக் கண்டுபிடித்து அனுப்பியிருக்கிறார்கள்.

சென்ற மாதம் கரும்பு கொண்டு எழுதிய பாடலுக்கு அடிப்படையான சொல்லான 'கரும்புள்ளி'யில் பொதிந்த அழகைச் சுட்டிக் காட்டியவர் டொராண்டோ பேராசிரியர் பசுபதி. அவருடைய நண்பர் மற்றொரு பேராசிரியர் அனந்தநாராயணனும் இதுபோல் சொல்லழகைக் காட்டும் பல பாடல்களை எழுதுபவர்.

ஆங்கிலத்தில் எதிர்ப்புறம் படித்தாலும் அதே சொல்வருமாறு அமைப்பதில் பசுபதி ஒரு புலி. NIAGARA O! ROAR AGAIN என்பது போலப் பல செய்துள்ளார். டொராண்டோ பல்கலைக்கழகத்தில் அவர் வலைப்பக்கத்தைத் தேடுங்கள்.

குறுக்காக:

3. திமிர் பிடித்தவளுக்கு யானை அங்கா ஆடுகிறது? (5)
6. புதிரும் குழப்புகிறதா? பின்புறம் பார் (4)
7. வழக்கோடு செலவு விவரம் (4)
8. ஐப்பசி, கார்த்திகை (6)
13. இடை வேட்டி விழுந்த மடம் முன்பு தூங்கப்போ, சுத்த மோசம். (2,4)
14. முக்கியமான உடலின் மேல்பாகம் ஆராய்ச்சியில் ஈடுபட... (4)
15. ... வயதான அரசர் சென்ற திசை வங்கக்கடல் பக்கமோ? (4)
16. ஆரமின்றித் தொடக்கம் உள்ளே பொருத்தமான வீரர்களுக்கப் பரிசு (5)

நெடுக்காக:

1. மன்னர் தலையீட்டால் கைலை தலைக்கனத்துடன் தென்னாட்டில் உயர்ந்து நிற்கும் (3,2)
2. தீவிரமாகக் காரியத்தில் ஈடுபடுபவர்களிடம் இல்லாத உயரத்தில் செல்லும் குணம்? (5)
4. கைப்பிடித்த கணவன் தலையோடு நடனம் (4)
5. பராசக்தியிடம் வேண்டப்பட்ட அளவு நிலம் பாதி வாழ்க்கை சமர்ப்பணம் (4)
9. ஒற்றுமையாய் இருக்கும் பூந்தியின் இனிய நிலை (3)
10. கயிற்றால் பிணைக்கக் கடைசியில் வராத கிழவி மாறிய வடிவானவள் (5)
11. நிற்க வேறிடமிருந்தால் ஆர்க்கிமிடிஸ் இதனால் உலகையே ஆட்டிவைக்க முடியும் என்றார் (5)
12. ஒழுங்குகெட்ட கந்தலை உதறிவிடு (4)
13. நெஞ்சு திக்திக்கென்று அடிக்கும்படி மாய ஸ்வரங்களிரண்டைச் சேர்த்துக் கலக்கு (4)

நீங்கள் புதிர் மன்னரா?

குறுக்கெழுத்துப் புதிருக்கான சரியான விடைகளை டிசம்பர் 15-க்குள் அனுப்பும் முதல் மூன்று வாசகர்களின் பெயர்கள் 'புதிர் மன்னர்கள்' சாதனைப் பட்டியலில் இடம் பெற்று அடுத்த இதழில் வெளிவரும். விடைகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: thendral@tamilonline.com. டிசம்பர் 15-க்குப் பிறகு, விடைகளை www.tamilonline.com என்ற சுட்டியில் காணலாம்.

vanchinathan@gmail.com

ஜனவரி 2009: புதிர் மன்னர்கள்

© TamilOnline.com