பிப்ரவரி 17, 2007 அன்று ஸ்ருதி ஸ்வர லயா (·ப்ரீமாண்ட், கலி·போர்னியா) தனது மூன்றாவது தியாகராஜ ஆராதனை விழாவைக் கொண்டாடியது. காலை 8:30 மணிக்குப் பஞ்சரத்ன கிருதிகளுடன் விழா
தொடங்கியது. பின்னர் மாணவர்கள் 'ராம நீ சமானம் எவரு', 'நகுமோமு' போன்ற பல தியாகராஜ கீர்த்தனைகளைப் பாடினார்கள். ஒவ்வொரு பாடலுக்கு முன்னரும் மாணவர்கள் அக்கிருதியின் பொருளை விளக்கிச்
சொன்னார்கள். பாடலுக்குப் பொருத்தமாகப் பின்னணியில் காண்பிக்கப்பட்ட 'ஸ்லைட் ஷோ' மனதைக் கவர்ந்தது.
அதன் பிறகு கர்நாடக இசையைப் பற்றிய வினாடி வினா நிகழ்ச்சி நடந்தது. சரியான பதில் கூறியவருக்கு சங்கீத மும்மூர்த்திகளான தியாகராஜர், முத்துசாமி தீக்ஷ¢தர், ஷ்யாமா சாஸ்திரிகள் ஆகியோரின் ஒட்டும்படம்
ஒன்று கிடைத்தது. திருமதி அனு சுரேஷ் மற்றும் அவரது முதுநிலை மாணவர்களின் ஆரத்தியோடு நிகழ்ச்சி நிறைவெய்தியது.
மானஸா சுரேஷ் |