தேவையான பொருட்கள் வாழைப்பழம் (அதிகம் பழுக்காதது) - 2 கடலைப் பருப்பு - 1/2 கிண்ணம் வெல்லம் - 1/2 கிண்ணம் ஏலக்காய்த் தூள் - 2 தேக்கரண்டி கோதுமை மாவு - 1/4 கிண்ணம் மைதா மாவு - 1/4 கிண்ணம் அரிசிமாவு - 2 தேக்கரண்டி உப்பு - சிறிதளவு எண்ணெய் - பொரிக்க நெய் - 2 தேக்கரண்டி
செய்முறை கடலைப்பருப்பை வெறும் வாணலியில் நன்றாக வறுத்து, பின் தண்ணீர் விட்டு வேகவிடவும். தண்ணீரை வடியவிட்டு நைசாக மிக்சியில் அரைத்து வெல்லம், ஏலக்காய் போட்டு ஒரு சுற்றுச் சுற்றவும். பின் வாணலியில் நெய் விட்டு, அரைத்த விழுதைப் போட்டுக் கிளறி, கெட்டியான பூரணம் செய்து கொள்ளவும்.
வாழைப்பழத்தை வில்லைகளாக நறுக்கிக் கொள்ளவும். கோதுமை, மைதா, அரிசி மூன்றையும் சிட்டிகை உப்பு சேர்த்துத் தண்ணீர் விட்டுக் மாவுப்பதமாகக் கரைக்கவும். வாழைப்பழ வில்லைகளின் மேல் பூரணத்தை மூடி, மாவில் தோய்த்து, எண்ணெயில் போட்டு பொன்னிறமாகப் பொரித்து எடுக்கவும். இது வித்தியாசமான சுவை உடையதாய், மிகவும் ருசியாக இருக்கும்.
தங்கம் ராமசாமி |