மிசௌரி தமிழ்ச் சங்கம் முத்தமிழ் விழா
மிசௌரி தமிழ்ச் சங்கத்தின் முத்தமிழ் விழா செயின்ட் லூயிஸ் ப்ரெண்ட்உட் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. இருநூறுக்கும் மேற்பட்ட மிசௌரிவாழ் தமிழர்கள் நிகழ்ச்சிக்கு வந்திருந்து சிறப்பித்தனர். பரத நாட்டியம் உட்படப் பல கலைநிகழ்ச்சிகள், வினாடி-வினா, நாடகம், மகளிரின் கலந்துரையாடல் போன்றவை நடைபெற்றன. நிகழ்ச்சிகளை இளங்கோவன் தங்கவேலுவும் ராமசுப்ரமணியன் செல்வ குமாரும் தொகுத்தளித்தனர். தமிழ்ச் சங்க இளைஞர் குழுவினர் நிகழ்ச்சிக்கு உறுதுணையாக இருந்தனர்.

தாஸ் பலராமன்

© TamilOnline.com