காலேஜ்வில் குமோன் பரிசளிப்பு விழா
காலேஜ்வில்லில் குமோன் (Kumon) பள்ளியை நடத்தி வருகிறார் பார்வதி ராமச்சந்திரன், இப்பள்ளிக்கு வெகு தூரத்திலிருந்து வந்தும் மாணவர்கள் கல்வி பயில்கிறார்கள்.

இப்பள்ளியின் பரிசளிப்பு விழா கடந்த டிசம்பர் 6, 2009 அன்று கொண்டாடப்பட்டது. நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு பதக்கங்கள், சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. சிறப்பு விருந்தினராக வந்திருந்த NJகுமோன் தலைமைச் செயலாளர் இவற்றை வழங்கினார். பார்வதி அவர்கள் அங்கு பணிபுரிவோரை அறிமுகப்படுத்தினார். குமோன் பள்ளியில் பணிபுரிபவர்கள் அனைவரும் உயர்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகள் என்பது குறிப்பிடத்தக்கது.

லதா சந்திரமௌலி,
பென்சில்வேனியா

© TamilOnline.com