கேல்வஸ்டனில் சூறாவளி நிவாரணம்
ஐகீ சூறாவளியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிதிநிவாரணம் அளிக்கும் வண்ணம் பல அமைப்புகள் ஒன்றுகூடிச் செயல்பட்டன. இந்திய-அமெரிக்க டிஸாஸ்டர்-ரிலீஃப் கவுன்சில், இந்தியா ஹவுஸ், இந்தோ-அமெரிக்கன் சேம்பர் ஆஃப் காமர்ஸ், இந்தோ அமெரிக்கன் பொலிடிகல் ஆக்‌ஷன் கமிட்டி, இந்தோ அமெரிக்கன் டாக்டர்ஸ் அசோசியேஷன் போன்றவை செப்டம்பர், அக்டோபரில் இந்தியா ஹவுஸில் விண்ணப்பங்களைப் பூர்த்தி செய்வது, மருத்துவச் சிகிச்சைகள் அளிப்பது போன்ற உதவிகளில் தொடங்கி, அறிவுரை அளிப்பதுவரை பல்வேறு நலப் பணிகளில் ஈடுபட்டன.

பல இயக்கங்கள், தனிமனிதர்கள் மூலம் $10,000 நிதி திரட்டப்பட்டது. இதற்கு சமமான தொகையை இந்தோ-அமெரிக்கன் சாரிட்டி ஃபவுண்டேஷன் அளிக்க முன்வர, மொத்தம் $20,000 தொகை டிசம்பர் 20 அன்று, தலா $10,000/- வீதம் 'UTMB கிராடுவேட் ஸ்கூல்', ‘கேல்வஸ்டன் ரிகவரி ஃபண்ட்' ஆகியவற்றுக்கு அளிக்கப்பட்டது. இந்தியன் கான்ஸல் ஜெனரல் திரு. சஞ்சீவ் அரோரா மற்றும் கேல்வஸ்டனின் மேயர் லிடா ஏன் தாமஸ் ஆகியோர் முன்னிலையில் இவை வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியின் துவக்கத்தில் அரோரா மற்றும் மேயர் லிடா இருவரும் மும்பையில் நடந்த தீவிரவாதத் தாக்குதலைக் கண்டித்ததுடன், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு மௌன அஞ்சலியும் செலுத்தினர்.

இந்தோ-அமெரிக்கச் சமூகத்தைச் சேர்ந்த பலரும் இவ்விழாவில் பங்கேற்றனர். நிதியளிப்பு நிகழ்ச்சி முடிந்த பின்னர் கேல்வஸ்டன் ஹவுஸிங் அதாரிட்டியின் இயக்குநர் ஹரிகிருஷ்ண ராவ் வந்திருந்தவர்களை நகரில் நடக்கும் நிவாரணப் பணிகளைக் காண அழைத்துச் சென்றார்.

நிதியளிக்க விரும்புவோர் தொடர்பு கொள்ள: நேட் மூர்த்தி,
பொருளாளர், இந்தோ-அமெரிக்க சேரிட்டி பவுண்டேஷன்

ஐகீ ரிலீஸ் ஃபண்டு,
5890 பாயிண்ட் வெஸ்ட் ட்ரைவ், ஹியூஸ்டன், TX 77036

காந்தி சுந்தர்

© TamilOnline.com