டல்லாஸ் மெரோப்ளெக்ஸ் தமிழ்ச் சங்கம் குழந்தைகளின் கலை நிகழ்ச்சி
டிசம்பர் 20, 2008 அன்று டல்லாஸ் (Dallas,TX) மாநகரத்தில் அமைந்துள்ள மெட்ரோப்ளெக்ஸ் தமிழ் சங்கத்தின் ஆண்டு நிறைவு விழா குழைந்தைகளின் திறன் நிகழ்ச்சியாக (talent show) பிளாஸா தியேடரில் அருமையாக நடந்தேறியது.

கடவுள் வாழ்த்துடன் சங்க நிகழ்ச்சிகள் ஆரம்பமாகின. டல்லாஸ் மற்றும் அதை சுற்றியுள்ள அனைத்து நகரங்களிருந்தும் இந்த நிகழ்ச்சிக்கு 400-க்கும் மேற்பட்டோர் வந்திருந்தனர். இந்த ஆண்டு நிகழ்ச்சிகளைப் பல்வேறு மாணவர்கள் தொகுத்து வழங்கினார்கள்.

இந்த நிகழ்ச்சி தனி நபராகவும், குழுக்களாகவும் நடைபெற்றது. குழந்தைகள் பாட்டு, நடனம் ஆகியவற்றை வழங்கினர். குழந்தைகளின் புண்சிரிப்பு அவர்களின் நடனத்துக்கு மேலும் அழகூட்டியது. பல்வேறு தமிழ்ப் பள்ளிகள் நாடகங்களைச் சிறப்பாக நடத்தினார்கள். நாடகங்களின் இடையே ஆடல், பாடல் நிகழ்ச்சிகள் நாடகத்தை மேலும் ரசிக்க வைத்தன. மொத்தம் 160 குழைந்தைகள் பங்கேற்ற 55 நிகழ்ச்சிகளும் அனைவரின் கைதைட்டலையும் பெற்றது. பங்கேற்ற அனைவருக்கும் சங்கத்தின் சார்பாக நினைவுப் பரிசு வழங்கப்பட்டது. சுமார் 5 மணி நேரத்துக்கும் மேலாக நடைபெற்ற இந்த நிகழ்ச்சி, பார்வையாளர்களை மிகவும் கவர்ந்தது.

பரணிதரன் இராதாகிருஷ்ணன்,
காப்பெல், டெக்ஸாஸ்

© TamilOnline.com