அட்லாண்டா தமிழ் சபை கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்
டிசம்பர் 21, 2008 அன்று அட்லாண்டா தமிழ் சபையின் கிறிஸ்துமஸ் நிகழ்ச்சிகளின் சிறப்பம்சமாக சிறுவர்களுக்கென பிரத்தியேகமாக ஆயத்தம் பண்ணப்பட்டிருந்த ஆராதனை நடைபெற்றது. போதகருடைய ஆரம்ப ஜெபத்தில் தொடங்கி சகோதரி போர்ஷியா சாம் அவர்கள் ஞாயிறு பள்ளி ஆண்டறிக்கை வாசிக்க சகோதரி ஜோனி தேவதாசன் குழுவினரின் கிறிஸ்துமஸ் நாடகம் சிறப்பாக அமைந்திருந்தது. தொடர்ந்து சகோதரி பெட்ரீஷியா வசந்த் குழுவினரின் 'கிறிஸ்துமஸ் வந்தாச்சு' சிறப்புப்பாடல் எல்லோரையும் கவர்ந்தது. சிறுபிள்ளைகள் கிறிஸ்துமஸ் சம்பந்தப்பட்ட நடனங்கள், பாடல்கள் ஆகியவற்றால் நிகழ்ச்சியைச் சிறப்பித்தனர்.

போதகர் பால்மர் பரமதாஸ் அவர்களின் ஆரம்ப ஜெபத்துடன் ஆராதனை தொடங்கிற்று. தொடர்ந்து இணைச் செயலர் அஜாய் தேவதாசனின் வரவேற்புரையை அடுத்து பாடல் குழுவினரின் கிறிஸ்துமஸ் பாடல்கள் மூலம் களை கட்டியது. சகோ. டானியேல் சாமுவேல்ராஜ் முன்னின்று நடத்த சபையார் எல்லோரும் இணைந்து பாடினர். சகோதரன் டானி தாசனின் வயலின் இசை போதகரின் செய்திக்கு முன்னுரையாக அமைந்திருந்தது.

சபை பொருளாளர் ஆல்பிரட் தியாகராஜு சபையின் நிதிநிலையறிக்கையை வாசிந்தார். அட்லாண்டா தமிழ் சபைக்கு சொந்தமாக ஒரு புது ஆலயம் வாங்க ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருப்பதைக் குறித்தும் அறிவித்தார். சபை மூப்பர் ஆன்டனி அற்புதராஜ் அட்லாண்டா தமிழ் சபை வளர்ச்சியடைந்ததை ஆண்டறிக்கையில் எடுத்துக் கூறினார். சபை செயலர் வசந்தகுமார் பிச்சுமணி நன்றி கூறினார். சகோ. ஜோசப் மோசஸ் சபைப் போதகருடைய ஊழியத்தைப் பாராட்டி கிறிஸ்துமஸ் பரிசு கொடுத்தார். எல்லா குழந்தைகளுக்கும் கிறிஸ்துமஸ் தாத்தா (சகோ. ஸ்டீபன் ஹென்றி) தோன்றி பரிசு வழங்கினார். நிகழ்ச்சிகளை ஷீபா இம்மானுவேல் தொகுத்து வழங்கினார். மதிய உணவுடன் விழா இனிதே நிறைவேறிற்று.

© TamilOnline.com