இந்தியாவில் வழங்கப்படும் இலக்கிய விருதுகளில் மிகவும் உயர்வானதாகக் கருதப்படுவது ஞானபீட விருது. தமிழகத்தில் 39-வது ஞானபீட விருது இரு ஆண்டுகளுக்கு முன்னால் எழுத்தாளர் ஜெயகாந்தனுக்கு வழங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து கடந்த ஆண்டு 40-வது ஞானபீட விருது, ரஹ்மான் ராஹி என்ற காஷ்மீரி எழுத்தாளருக்கு, அவரது 83வது வயதில் கிடைத்தது. தற்போது 41-வது ஞானபீட விருது, கோவாவைச் சேர்ந்த கொங்கணி மொழி எழுத்தாளரான 83 வயது ரவீந்திர ராஜாராம் கேலேகருக்கும், சமஸ்கிருத நிபுணர் சத்வீத் சாஸ்திரிக்கும் இணைந்து வழங்கப்படுகிறது. கேலேகர், கொங்கணியைத் தவிர, மராத்தி, ஹிந்தி ஆகிய மொழிகளிலும் எழுதுபவர் என்பது குறிப்பிடத்தகக்து. தாமதமான கௌரவம் தான்.
அரவிந்த் |