இரா - முழுதும் திகல்
திகில் படம் என்றாலே கத்தி, இரத்தம், கோரமான உருவங்கள், கிராஃபிக்ஸ் நிச்சயம் இருக்கும். அப்படி இல்லாமல் உண்மையாகவே திகிலான படமாக உருவாகி வரும் படம் 'இரா'. 'இரா' என்றால் 'இராத்திரி'. 'மக்களிடம் கலந்து பேசி, அவர்களுடைய அமானுஷ்ய அனுபவங்களைக் கொண்டு இப்படத்தின் கதை எழுதப்பட்டுள்ளது. அதனால் படம் பார்ப்பவர்கள் திகிலடைவது நிச்சயம்' என்கிறார்கள் இயக்குநர்கள் ஹரிஷ் நாராயண், கிருஷ்ணசேகர் ஆகியோர். ஆவிகள், பேய்கள் உண்டா, இல்லையா - என்ற கேள்வியை அடிப்படையாக வைத்து உருவாகி வரும் இப்படத்தின் முக்கியமான விஷயம் - கண்ணதாசனின் ஆவி ஒரு பாடலை எழுதியிருக்கிறது என்பதுதான். படத்தின் பெரும்பாலான காட்சிகளை, மூணாறு மலைப்பகுதியில் உண்மையாக ஆவிகள், பேய்கள் நடமாடுவதாக நம்பப்படும் பகுதியில் இரவு நேரத்தில் படமாக்கியுள்ளனராம்.

அரவிந்த்

© TamilOnline.com