லலித கான வித்யாலயா வழங்கும் 'குரு வந்தனம்'
மார்ச் 10, 2007 சனிக்கிழமையன்று லலித கான வித்யாலயாவின் திருமதி லதா ஸ்ரீராம் அவர்களும் அவரது சிஷ்யர்களும் 'குரு வந்தனம்' என்ற நிகழ்ச்சியை அளிக்க இருக்கிறார்கள். பிரபல கிளீவ்லாந்து தியாகராஜ

ஆராதனைக்கு நிதி திரட்டும் நோக்கத்தோடு இந்த நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இந்த நிகழ்ச்சி வித்யாலயாவின் 15வது ஆண்டுவிழாவையும் கொண்டாடுகிறது.

நிகழ்ச்சிக்குத் திரு. V.V. சுந்தரம் அவர்கள் தலைமை தாங்குவார்கள். குருவின் பெருமையைப் போற்றும் வண்ணம் அமைக்கப்பட்டுள்ள இந்த நிகழ்ச்சிக்கான பாடல்களை லதா ஸ்ரீராம், அவரது தந்தை திரு. R.

ராஜகோபாலன், மாமா திரு. N.S. ராமச்சந்திரன் ஆகியோர் எழுதியுள்ளனர்.

நிகழ்ச்சி: குரு வந்தனம்
நாள்: மார்ச் 10, 2007; சனிக்கிழமை; மாலை 4:30 மணி
இடம்: The Ohlone College Gary Soren Smith Center for the Fine and Performing Arts
நுழைவுச் சீட்டு: $15 (பொது); $50 (கொடையாளர்)
விவரங்களுக்கு: தொலைபேசி: 510.490.6141 (லலித கான வித்யாலயா)

R. ஸ்ரீராம்

© TamilOnline.com