கலாட்டா 2007
தமிழ்நாட்டில் பல இடங்களில் சமூகசேவை செய்துவரும் உதவும் கரங்கள் இயக்கத்தின் சான் ·ப்ரான்ஸிஸ்கோ விரிகுடாப் பகுதி வட்டம் மீண்டும் இந்த வருட வசந்த விழாவான கலாட்டா 2007 கலைநிகழ்ச்சியை நடத்த உள்ளது. வழக்கம்போல விழாவில் திரட்டப்படும் நிதி உதவும் கரங்களின் தொடரும் சமூகப்பணி முயற்சிகளுக்கு அளிக்கப்படும்.

ஏப்ரல் 7 அன்று சான் ·ப்ரான்ஸிஸ்கோ விரிகுடாப் பகுதியின் Chabot College (Hayward) அரங்கத்திலும், அதற்கு வெளியேயும் நடக்கப் போகும் கலாட்டா-2007 நிகழ்ச்சி சென்ற வருடங்களை விடச் சிறப்பாக இருக்கும். பிற்பகல் முழுவதும் நடைபெறப் போகும் நிகழ்ச்சிகளுக்கும் போட்டிகளுக்கும் உச்சகட்டமாக மாலையில் விரிகுடாப் பகுதியில் மிகப் பிரபலமான பல்லவி குழுவினரின் மாபெரும் மெல்லிசை நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.

பிற்பகல் நிகழ்ச்சிகள்: சிரிப்பா செருப்பா, கலாட்டா ஐடல், உடையலங்காரக் காட்சி (fashion show), பகல் ரகளை (matinee madness). இந்நிகழ்ச்சிகளைப் பற்றிய விவரங்கள் வருமாறு:

கலாட்டா ஐடல் (Galaata Idol) மிக முக்கியமான நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சியில், 15 வயதும் அதற்கு மேற்பட்டவரும் பங்கேற்றுப் பாட்டுத் திறனைக் காட்டலாம். முதல் இரண்டு இடங்களுக்கு நடுவர்களால் தேர்ந்தெடுக்கப்படும் போட்டியாளர்கள் பல்லவி குழுவினருடன் சேர்ந்து பாடும் வாய்ப்புப் பெறுவார்கள்!

பகல் ரகளை (Matinee Madness) நிகழ்ச்சியில் கோலிவுட் க்விஸ், பாட்டுக்குப் பாட்டு போன்ற போட்டிகள் நடைபெறும். கலாட்டாவுக்கே உரிய பேட்டை நடை (Pettai Walk) என்னும் உடையலங்கார, மேடைநடன நிகழ்ச்சியும் நடைபெற உள்ளன. இந்நிகழ்ச்சிகளைப் பற்றிய பல விவரங்களும், சென்ற வருட வீடியோக்களும் பார்த்து மகிழ: http://www.galaata.org

நிகழ்ச்சிகளில் பங்கேற்பதும், உதவுவதும் குதூகலமான பொழுதுபோக்காக அமைவது மட்டுமல்லாமல் சமூக சேவையாகவும் அமையும்.

இத்தகைய நிகழ்ச்சிகள் பலரின் நன்கொடையால் சாத்தியமாகிறது. புரவலர் நிலையில் நன்கொடை வழங்குவதின் பலன்களையும், வழங்கும் முறையைப் பற்றியும் மேலும் அறிய கீழ்க் குறிப்பிடப்பட்டிருக்கும் வலைதளங்களில் அளிக்கப்பட்டுள்ள விவரங்களின் படி, விரிகுடாப் பகுதி உதவும் கரங்கள் இயக்கத்தினரை அணுகுங்கள். நன்கொடை தரவும், தொண்டராகப் பணியாற்றவும், கலாட்டா-2007 போன்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்கவும் தொடர்பு கொள்ள:
http://www.udavumkarangal-sfba.org
http://www.galaata.org

கதிரவன் எழில்மன்னன்

© TamilOnline.com