வேர்க்கடலை சுண்டல்
தேவையான பொருட்கள்
உரித்த வேர்க்கடலை - 2 கிண்ணம்
மிளகாய் வற்றல் - 3
பச்சை மிளகாய் - 3
தேங்காய்த் துருவல் - 1/2 கிண்ணம்
பெருங்காயம் - சிறிதளவு
கடுகு - 1 தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை - சிறிதளவு
உப்பு - தேவைக்கேற்ப
எண்ணெய் - தாளிக்க

செய்முறை
வேர்க்கடலையை 1 மணி நேரம் ஊற வைத்து, உப்பு சேர்த்துக் குக்கரில் வேக விடவும். வெந்தவுடன் நீரை வடித்து வாணலியில் கடுகு, உளுத்தம்பருப்பு, மிளகாய் வற்றல், பச்சை மிளகாய், பெருங்காயம், கறிவேப்பிலை தாளித்துக் கொண்டு, கடலையைப் போட்டு நன்றாக வதக்கவும். பிறகு தேங்காய்த் துருவல் சேர்த்துக் கிளறி இறக்கிச் சாப்பிடலாம். இதில் கொஞ்சம் கேரட் துருவிப் போட்டுக்கொண்டால் ம்ம்ம்... ஒரே சுவைதான்!

குறிப்பு: இவை தவிர கொண்டைக்கடலை, பாசிப்பருப்பு, கடலைப்பருப்பு, சோயாபீன்ஸ் ஆகியவற்றிலும் சுண்டல் செய்யலாம். எல்லா தானியங்களையும் போட்டு நவரத்ன சுண்டலும் செய்யலாம். தேவை மற்றும் ருசிக்கேற்ப மசாலாவும் சேர்த்துக் கொள்ளலாம்.

தங்கம் ராமசாமி

© TamilOnline.com