முளைக கட்டிய பயறு சுண்டல்
தேவையான பொருட்கள்
பச்சைப் பயிறு - 2 கிண்ணம்
மிளகாய் வற்றல் - 5
தேங்காய்த் துருவல் - 1/2 கிண்ணம்
இஞ்சி - சிறிய துண்டு
கடுகு - 1 தேக்கரண்டி
பச்சை மிளகாய் - 2
நறுக்கிய வெங்காயம் - 1/2 கிண்ணம்
கறிவேப்பிலை - சிறிதளவு
கொத்துமல்லி - சிறிதளவு
எலுமிச்சம்பழம் - 1 மூடி
உப்பு - தேவைக்கேற்ப
எண்ணெய் - தாளிக்க

செய்முறை
பச்சைப் பயறைக் கழுவி இரவில் ஊற வைக்கவும். மறுநாள் எடுத்து நீரை வடிய விட்டு, ஒரு துணியில் முடிச்சாகக் கட்டி வைத்து, அவ்வப்போது சிறிது தண்ணீர் தெளிக்கவும். அடுத்த நாள் காலையில் வெண்மையாக முளை வந்திருக்கும். அதை உப்புப் போட்டுக் குக்கரில் வேக விடவும். வெந்தபின் நீரை வடித்து வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, பெருங்காயம், மிளகாய் வற்றல், பச்சை மிளகாய், இஞ்சி, வெங்காயம் சேர்த்துத் தாளித்து, வேக விட்ட பயறை அதில் போட்டுக் கிளறி, தேங்காய்த் துருவல் சேர்க்கவும். கறிவேப்பிலை, கொத்துமல்லி பொடியாய் நறுக்கிப் போட்டு இறக்கி, சிறிது ஆறியவுடன் எலுமிச்சம் பழத்தைப் பிழியவும். இது மிகச் சத்துள்ள சுண்டல் ஆகும்.

தங்கம் ராமசாமி

© TamilOnline.com