தேவையான பொருட்கள் சிவப்புக் காராமணி - 2 கிண்ணம் வெல்லம் - 1/2 கிண்ணம் தேங்காய்த் துருவல் - 1/2 கிண்ணம் கடுகு - 1 தேக்கரண்டி மிளகாய் வற்றல் - 3 உப்பு - தேவைக்கேற்ப நெய் - தாளிக்க கறிவேப்பிலை - சிறிதளவு எண்ணெய் - சிறிதளவு
செய்முறை காராமணியை வாணலியில் எண்ணெய் விடாமல் வாசனை வரும்வரை வறுக்கவும். பின் அதில் சிறிது உப்புச் சேர்த்து குக்கரில் போட்டு வேக வைக்கவும். நீரை வடிக்கவும். வாணலியில் எண்ணெய், நெய் விட்டு கடுகு, மிளகாய் வற்றல் தாளித்து வெல்லம் போட்டு, துளி தண்ணீர் சேர்த்துக் கரையவிடவும். வெல்லம் கரைந்து கொதித்து வரும்போது, வெந்த காராமணியைப் போட்டு நன்கு கிளறவும். பின் அதனுடன் தேங்காய்த் துருவல் சேர்த்து ஒன்றுசேரக் கிளறி இறக்கி, கறிவேப்பிலை சிறிதளவு நறுக்கிப் போடவும்.
தங்கம் ராமசாமி |