தேவையான பொருட்கள் ராஜ்மா - 2 கிண்ணம் மிளகாய் வற்றல் - 4 தனியா - 1/2 கிண்ணம் லவங்கம் - 2 ஏலக்காய் - 2 பட்டை - சிறிதளவு வெங்காயம் நறுக்கியது - 1 கிண்ணம் கறிவேப்பிலை - சிறிதளவு இஞ்சி - சிறிய துண்டு கடுகு - 1 தேக்கரண்டி தேங்காய்த் துருவல் - 1/2 கிண்ணம் பச்சை மிளகாய் - 3 கொத்துமல்லி - சிறிதளவு உப்பு - தேவைக்கேற்ப
செய்முறை ராஜ்மாவை எட்டு மணி நேரம் வரை ஊறவைத்து, உப்புச் சேர்த்து குக்கரில் நன்கு வேக வைக்கவும். வெந்தவுடன் நீரை வடிக்கவும். வாணலியில் சிறிது எண்ணெய்விட்டு தனியா, இலவங்கம், பட்டை ஆகியவற்றை வறுத்து தேங்காயுடன் மிக்சியில் பொடி செய்யவும். பின்னர் கடுகு, மிளகாய் வற்றல், பச்சை மிளகாய், பெருங்காயம், வெங்காயம் ஆகியவற்றைத் தாளித்து ராஜ்மாவைப் போட்டு வதக்கி மசாலாப் பொடியையும் போடவும். சிறிது வதங்கியதும் இறக்கி கறிவேப்பிலை கொத்துமல்லி நறுக்கிப் போடவும்.
தங்கம் ராமசாமி |