தேவையான பொருட்கள் பிளாக் ஐடு பீன்ஸ் - 2 கிண்ணம் மிளகாய் வற்றல் - 3 பச்சை மிளகாய் - 3 கடுகு - 1 தேக்கரண்டி இஞ்சி - சிறிய துண்டு தேங்காய்த் துருவல் - 1/2 கிண்ணம் எலுமிச்சம்பழம் - 1/2 மூடி பெருங்காயம் - சிறிதளவு உப்பு - தேவைக்கேற்ப கறிவேப்பிலை - தேவைக்கேற்ப கொத்துமல்லி - தேவைக்கேற்ப வெங்காயம் நறுக்கியது - 1/2 கிண்ணம் எண்ணெய் - தாளிக்க
செய்முறை பீன்ஸை வாணலியில் எண்ணெயில்லாமல் வறுத்து ஊறப்போடவும். சுமார் 4 மணி நேரம் ஊறியதும் உப்புப் போட்டு வேக வைக்கவும். நீரை வடியவிட்டு, வாணலியில் கடுகு, பெருங்காயம், இஞ்சி, வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்துத் தாளித்து, பீன்ஸைப் போட்டு, தேங்காய்த் துருவல் சேர்த்து வதக்கவும். பின் அதை இறக்கி, எலுமிச்சைச் சாறு விட்டுக் கொத்துமல்லியைப் பொடியாய் நறுக்கிப் போடவும். மிளகாய், தேங்காய், இஞ்சி இவற்றை மிக்சியில் அரைத்து விழுதாகவும் சுண்டலில் போடலாம். சுவை அதிகமாக இருக்கும்.
தங்கம் ராமசாமி |