TAMFEST 2008
செப்டம்பர் 20, 2008 தமிழ் மக்களை இணைப்பதற்காக ஏற்படுத்தப்பட்ட Tamfest அமைப்பின் தமிழ் விழா பார்சிப்பனி, நியூஜெர்ஸியில் நடைபெற்றது. மழலைகளின் தமிழாற்றல், அமெரிக்க வாழ்க்கையை நையாண்டி செய்த குறுநாடகங்கள், வில்லுப்பாட்டு, பார்வையாளர்கள் பங்கேற்ற ரசிக நிகழ்ச்சி, நாடகம், நகைச்சுவை விவாதங்கள் ஆகியவை இதில் இடம் பெற்றன. 250க்கும் மேற்பட்டோர் இதில் பங்கேற்றனர். விருந்துடன் விழா முடிந்தது.

மேல் விவரங்களுக்கு:
www.tamfest.com

சிவா ராமநாதன், நியூஜெர்ஸி



© TamilOnline.com