ஆஷா நிகேதனுக்கு நிதி திரட்டும் நிகழ்ச்சி
ஆஷா நிகேதனின் நண்பர்கள் (Friends of Asha Nikethan) என்னும் லாபநோக்கற்ற பொதுநல நிறுவனத்தின் நிதி திரட்டும் நிகழ்ச்சி செப்டம்பர் 26, 2008 அன்று ப்ரூக்லின் ரெக்ஸ் மேனரில் (நியூயார்க்) நடந்தது.

இசைமணி சாவித்திரி ராம் கடவுள் வாழ்த்துப் பாடி நிகழ்ச்சியைத் துவக்கி வைத்தார். திரிலோக் ஃப்யூஷன் பரத நாட்டியப் பள்ளி மாணவிகள் நடனமாடி பார்வையாளர்களை மகிழ்வித்தனர். இந்தியாவில் உள்ள ஐந்து ஆஷா நிகேதன் மையங்களில் பராமரிக்கப்படும் மனவளர்ச்சி குன்றியவர்களின் அன்றாட வாழ்க்கை மேம்பாட்டுக்காக இந்த நிகழ்ச்சி மூலம் நிதி திரட்டப்பட்டது. நிகழ்ச்சியில் இருநூறுக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். நியூயார்க் மாகாணத்தின் மனவளர்ச்சி குன்றியோருக்கான கமிஷனரும், அரசியல் தலைவர்களும் முக்கிய விருந்தினராகப் பங்கேற்றனர்.

அன்புள்ளம் கொண்டவர்களின் ஆதரவை ஆஷா நிகேதன் வேண்டுகிறது. நன்கொடைகளுக்கு விரிவிலக்கு உண்டு. காசோலைகளை 'Friends of Asha Nikethan' என்ற பெயரில் அனுப்பலாம். அனுப்ப வேண்டிய முகவரி:

Friends of Asha Nikethan
P.O.Box. 182, Candlewood Isle
New Fairfield, CT - 06812

உஷா வெங்கட்ராகவன்

© TamilOnline.com