நவம்பர் 1, 2008 அன்று டாலஸ்-ஃபோர்வொர்த் இந்தியன் ஃபைன் ஆர்ட்ஸ் அகாடமி, 'சங்கீத சரஸ்வதி' லலிதா சேஷாத்ரி அவர்களின் கர்நாடக இசைக் கச்சேரியை ஆலன் நூலக அரங்கத்தில் வழங்கியது. லலிதா சேஷாத்ரி, செம்மங்குடி ஸ்ரீனிவாச ஐயர் அவர்களின் நேரடி சிஷ்யரான எம்.ஏ. வேணுகோபாலின் முதல் சிஷ்யை ஆவார். உயர்நிலை இசைப்பயிற்சியை செம்மங்குடி, பாலமுரளி கிருஷ்ணா ஆகியோரிடம் பெற்றார்.
லலிதாவின் தர்மாவதி ராக நிரவல், மிஸ்ரஜாதி திரிபுடையில் அமைந்த பஞ்சமுகி தாளத்தில் அவர் செய்த ராகம் தானம் பல்லவியில் காண்பித்த வித்வத் ஆகியவை வித்தகர்களையும் வியக்க வைத்தன.
சந்தியா ராமநாதன் (வயலின்), ரஜனா சுவாமிநாதன் (மிருதங்கம்) ஆகியோர் பக்கம் வாசித்தனர். பேட்ரிக் ஹென்றி கொன்னக்கோல், கஞ்சிரா, கடம் ஆகியவற்றைத் தேவைக்கேற்றவாறு மாற்றி மாற்றி வாசித்தார். |