அட்லாண்டா பெருநகரத் தமிழ் சங்கம் தீபாவளி கொண்டாட்டம்
நவம்பர் 9, 2008 அன்று அட்லாண்டா பெருநகரத் தமிழ்ச் சங்கம் (GATS) தீபாவளித் திருவிழாவைக் கொண்டாடியது. அமெரிக்க தேசிய கீதத்துடன் துவங்கிய நிகழ்ச்சியில் எஸ். பிரியா, பி. அபர்ணா, பி. வித்யா, எஸ். ரஜினி, கே. கீதா, ஆர். பூங்கோதை, எஸ். தில்லானி, ஏ.கவிதா, ஆர். சுவாதி, உமா ஆகியோர் பல சுவையான திரைப்படப் பாடல்களைப் பாடினர்.

FeTNA 2009 மாநாட்டின் ஒருங்கிணைப்பாளர்கள் ஆனந்த், அபை, அரசு, நாகி ஆகியோர் அதன் தொண்டர்களை மேடையில் அறிமுகப்படுத்தினர். 2009 ஜூலை 3, 4 தேதிகளில் அட்லாண்டாவில் நடக்க இருக்கும் FeTNA 2009 மிகப் பெரிய வெற்றியை அடையும் என்ற நம்பிக்கையைத் தெரிவித்தனர்.

தொடர்ந்து நடந்த இசைமழை நிகழ்ச்சியில் ஜி.பி., எஸ்.சந்திரா, எம். ஜெயா, வி. அருள், எஸ். தீபா ஆகியோர் பங்கேற்றனர்.

சாந்த் குப்புஸ்வாமி

© TamilOnline.com