நவம்பர் 15, 2008 அன்று சங்கரா கண் அறக்கட்டளை இந்தியாவில் நடத்தும் கண் மருத்துவப் பணிகளுக்காக நிதி திரட்டும் பொருட்டு அன்று கலிபோர்னியாவிலுள்ள நார்வாக் நகரத்தின் எக்ஸல்சியர் பள்ளியில் பல்வேறு கலை நிகழ்ச்சிகளை சிறப்பாக நடத்தியது.
இந்திய தேசிய கீதத்துடன் நிகழ்ச்சி ஆரம்பமானது. குஜராத்தி மொழியில் சிறு நாடகம், பல ஹிந்தி சினிமா பாடல்களுக்குப் பெரியவர் சிறியவர்களின் ஆட்டம், மலையாள சினிமா பாடலுக்குச் சிறுவர் சிறுமியரின் ஆட்டம், பஞ்சாபி பாங்க்ரா ஆட்டம் என மேடையே அமர்க்களப்பட்டது.
நிகழ்ச்சியின் மூலம் வசூலான தொகை யனைத்தும் இந்தியாவில் சங்கரா கண் நிறுவனம் நடத்தும் கண் மருத்துவச் சேவைகளுக்குப் பயன்படும். நிகழ்ச்சியின் நடுவில் சங்கரா கண் நிறுவனத்தின் செயல்பாடுகள் குறித்த செய்தித் தொகுப்பும் திரையிடப்பட்டது.
சங்கரா கண் நிறுவனம் 2020ஆம் ஆண்டுக்குள் கண்பார்வை குறைவாய் உள்ள இந்தியர்கள் அனைவருக்கும் முழுமையான பார்வை அளிப்பதை நோக்கமாக கொண்டுள்ளது. இதற்கு உதவ விரும்புகிறவர்கள் அமெரிக்கப் பிரிவின் இணைய தளத்தைப் பார்க்க: www.giftofvision.org
அருள் |