கொலராடோ தமிழ் சங்கம்: தீபாவளி கொண்டாட்டம்
நவம்பர் 15, 2008 அன்று கொலராடோ தமிழ்ச் சங்கம் டென்வரின் தெற்குப் பகுதியில் இருக்கும் லிட்டில்டன் ஹெரிட்டேஜ் உயர்நிலைப்பள்ளியில் தீபாவளி விழா கொண்டாடியது. மன்ற உறுப்பினர்களின் படைப்புகளைத் தாங்கி வரும் 'மலைச்சாரல்' என்ற பத்திரிகையின் வெளியீட்டு விழாவாகவும் இது அமைந்தது.

உள்ளூர் தேவாரக் குழுவின் குழந்தைகள் பங்கேற்ற இறைவணக்கத்துடன் விழா ஆரம்பித்தது. டென்வரில் இருக்கும் அபிநயா நாட்டியப் பள்ளி, லயா நாட்டியச் சாலை, சிவாஞ்சலி நாட்டியப் பள்ளி ஆகியவற்றின் மாணவியர் பங்கேற்ற நடனங்கள் அற்புதமாக இருந்தன.

'அசத்தப் போவது குட்டீஸ்' என்ற தலைப்பில் குழந்தைகள் கரகாட்டம், திரைப்படப் பாடல் நடனம் ஆடியது வெகு அழகு. குறைந்தது 100 குழந்தைகள் இதில் பங்கேற்றனர். ஹிலரி கிளின்டனைக் கதாபாத்திரமாகக் கொண்ட 'தசாவதாரம் ஆரம்பம்' நகைச்சுவை நாடகம் பலத்த கைதட்டலைப் பெற்றது. உள்ளூர்க் கலைஞர்கள் சுவையான மெல்லிசை வழங்கினார்கள். 'டூயட்' படப் பாடலுடன் விழா நிறைவு பெற்றது.

தகவல்: சர்மிஷ்டா
தமிழில்: ஜெயந்தி ஸ்ரீதர்

© TamilOnline.com