டெலவர் வெல்லி பெருநகர்த் தமிழ் சங்கம் தீபாவளி விழா
நவம்பர் 15, 2008 அன்று டெலவர் வேல்லி பெருநகரத் தமிழ் சங்கத்தின் (TAGDV) தீபாவளிக் கொண்டாட்டம் நியூஜெர்ஸியிலுள்ள ஹேரிங்க்டன் நடுநிலைப் பள்ளியில் நடைபெற்றது. சங்கத்தின் சார்பாக ‘சங்கமம்' என்ற பத்திரிகையை அதன் ஆசிரியர் வாசு அரங்கநாதன் வெளியிட்டார்.

தமிழ்த் தாய் வாழ்த்துடன் துவங்கிய நிகழ்ச்சியில் குழந்தைகளின் கலைநிகழ்ச்சி சிறப்பாக இருந்தது. 'ஜல்ஜல்ஜல்' பாட்டுக்கு திவ்யாவும், அஸ்வினியும் ஆடிய நடனமும், பெண்கள் ஆடிய குழு நடனமும், கோவலன்-கண்ணகி அமெரிக்க வருகை குறித்த குறத்தி நடனமும், குட்டிக் குழந்தைகள் ஆடிய நடனமும், பரதநாட்டியமும் சிறப்பாக இருந்தன.

இறுதியில், திருக்குறள்-தமிழ்த் தேனீ போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. தொடர்ந்து 'ஜெர்ஸி ரிதம்' குழுவினரின் இன்னிசை நிகழ்ச்சி நடந்தது. சிறந்த பாடல்களைப் பாடி, ஆடி அக்குழுவினர் மக்களை மகிழ்வித்தனர்.

லதா சந்திரமௌலி,
காலேஜ்வில், பென்சில்வேனியா

© TamilOnline.com