அட்லாண்டாவில் கிறிஸ்து பிறப்பு நிகழ்ச்சிகள்
நவம்பர் மாதம் கடைசி வாரம் நன்றியறிதலின் நாட்கள் முடிந்தவுடன் தொடங்கி ஒவ்வொரு வாரமும் வெள்ளி மற்றும் சனிக்கிழமை மாலை நேரத்தில் வீடு வீடாகப் போய் சபை போதகர் பால்மர் பரமதாஸ் அவர்களும் சபையாரும் கிறிஸ்துமஸ் துதிப்பாடல்களைப் (Christmas Carols) பாடி, கிறிஸ்து பிறப்பின் நற்செய்திகளைக் கூறி உற்சாகப்படுத்துவது வழக்கம். அட்லாண்டா பெருமாநகரில் வசிக்கும் தமிழர், இந்தச் சிறப்புப் பாடல்குழு தங்கள் இல்லங்களுக்கு வர விரும்பினால் சபை போதகர் அவர்களை pastor@atlanta tamilchurch.org என்ற மின்னஞ்சல் முகவரிக்குத் தொடர்பு கொள்ளலாம்.

டிசம்பர் 14, 2008 ஞாயிறு மாலை 5:30 மணிக்கு அட்லாண்டா தமிழ்ச் சபை தேவாலயத்தில் 'குடும்பப் பாடல் ஆராதனை' நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது.

மாதம்தோறும் கடைசி ஞாயிறன்று ஞாயிறு பள்ளி மாணவர்கள் தமிழில் பாடல்களைப் பாடவும் வேதாகம வசனங்களைத் தமிழில் மனப்பாடமாகச் சொல்லவும் பயிற்றுவிக்கப் படுகின்றனர். பள்ளிச் சிறுவர்களின் திறமைகளை வெளிக்கொண்டு வரும் நோக்கோடு சிறுவர் கலைநிகழ்ச்சி டிசம்பர் 21 ஞாயிறு மாலை 5:30 மணிக்கு நடைபெறவுள்ளது. பங்கு பெற விரும்புவோர் தமது பிள்ளைகளின் பெயர்களையும் விபரங்களையும் pastor@atlantatamilchurch.org என்ற முகவரிக்கு அனுப்பலாம்.

டிசம்பர் 25ம் தேதி வியாழன் காலை 10:30 மணிக்கு கிறிஸ்துமஸ் ஆராதனை நடைபெறும். அதில் போதகர் அவர்கள் விசேசச் செய்தி அளிப்பார்கள். பாடல்குழுவினர் சிறப்புப் பாடல்களைப் பாடுவார்கள். முடிவில் கிறிஸ்துமஸ் தாத்தா சிறு பிள்ளைகளுக்கு வெகுமதிகளை அளிப்பார். மதியம் கிறிஸ்துமஸ் விருந்து உண்டு.

புதுவருடத்தை ஆலயத்தில் ஆரம்பித்து ஆலயத்தில் முடிக்கும் வண்ணம் டிசம்பர் 31ம் தேதி இரவு 10:30மணிக்கு 'விசேசித்த ஆராதனை' நடைபெறும்.

மேலும் விபரங்களுக்கு www.atlanta tamilchurch.org

சகோ. பரமதாஸ்

© TamilOnline.com