டிசம்பர் 2008: குறுக்கெழுத்துப் புதிர்
சென்ற இதழில் இடம்பெற்ற குறிப்பொன்று ஒரு புராணத்தை அடிப்படையாகக் கொண்டது. ஏதோ ஒரு போட்டியில் பிரம்மா சிவனின் முடியைத் தொட்டு விடுவதாகக் கூறினார். சிவன் நெடியவடிவை
ஏற்றதால் பிரம்மாவால் முடியவில்லை.

அப்போது சிவன் அணிந்திருந்த தாழம்பூ ஒன்று காய்ந்துபோய்க் கீழே விழுந்து கொண்டிருந்ததைக் கண்டு அதை பிரம்மா பிடித்துக்கொண்டார். தான் சிவன் முடியை எட்டியதற்கு அத்தாட்சியாகக் காட்டித் தாழம்பூவைப் பொய்சாட்சி உரைக்க வைத்தார். எனவே தாழம்பூ = பிரம்மனின் பொய்சாட்சி என்று அப்புதிரில் பயன்படுத்தப்பட்டது.

இதை அறிந்த சிவபெருமான் தாழம்பூவை அதன்பின் சிவாலயங்களில் பூஜைக்குப் பயன்படுத்தக் கூடாதென்றாராம். இந்த அழகான பூவைக் கோயில்களில் காணும் வாய்ப்பை நாம் இழந்துவிட்டோம்.

அதுசரி, சிவன் விரும்பி அணியும் கொன்றை மலரைக் கோயில்களில் காணமுடிகிறதா?

குறுக்காக
5. சாரமதி என்று ஆரம்பத்திலிருந்து கடைசி வரை அதையே கூறு! (2)

6. காவிப்பல் நொண்டி விளிம்பில்லாக் கிண்ணம் மாற்றிட விடுத்த வேண்டுகோள்? (6)

7. விநாயகருக்கு வணக்கம் தெரிவித்து அனுமன் எதிர்வரும்போது மலர் வீழுமா? (4)

8. தாய் நோய் (3)

9. வாங்கல் விற்றல் மூலம் கிடைத்ததன்றி மற்றவை மாடல்ல (3)

11. டி.என். ராஜரத்தினம் பிள்ளை நாவறிந்தது (3)

13. தன்னாட்சிக் கல்லூரிகளில் நுழைவது எளிதல்ல (4)

16. நடு திரவமா? இரண்டாவதில்லாமல் அவரோகணத்தில் கடைசி ராகம் (6)

17. கரும்பிலிருந்து வரும்போது மலர்களால் தொடுக்கப்பட்டது (2)

நெடுக்காக
1. கச்சேரியில் கேட்கப்படும் வழக்கின் மூலம் கிடைப்பது அறிவு (4)

2. ஒரு கனி காய, கவி இலக்கிய உருவென மாறினார் (5)

3. மகாமக ஊர் முழுதும் இல்லாத பார்வை (3)

4. முதற் கடவுள் தோன்றிய வடிவம் ராகத்தோடு இயைந்து வரும் ஒன்று (4)

10. எல்லைகளின்றி அவித்திட தலை அசைத்த வழக்கத்திலிருந்து மாறுபட்டிருக்கும் தன்மை (5)

12. பட்டை மரத்தை வெட்டிய பாதி சொல் (4)

14. நண்டு முதலில் கண்டு கச்சேரியில் அடிபடுவதுண்டு (4)

15. இருபத்தெட்டிலிருந்து பிறந்த ராகம் ராமதாசன் கடைப்பிடித்த பொருள் (3)

vanchinathan@gmail.com

நீங்கள் புதிர் மன்னரா?

குறுக்கெழுத்துப் புதிருக்கான சரியான விடைகளை டிசம்பர் 15-க்குள் அனுப்பும் முதல் மூன்று வாசகர்களின் பெயர்கள் 'புதிர் மன்னர்கள்' சாதனைப் பட்டியலில் இடம் பெற்று அடுத்த இதழில் வெளிவரும். விடைகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: thendral@tamilonline.com. டிசம்பர் 15-க்குப் பிறகு, விடைகளை www.tamilonline.com என்ற சுட்டியில் காணலாம்.

நவம்பர் 2008 புதிர் மன்னர்கள்


நவம்பர் 2008 குறுக்கெழுத்துப்புதிர் விடைகள்

© TamilOnline.com