கிச்சன் கில்லாடி சமையல் போட்டி
தேவையான பொருட்கள்
கருப்பு இனிப்பு அரிசி - 1 கிண்ணம்
கெட்டி தேங்காய்ப் பால் - 1 கிண்ணம்
நீர்த்த தேங்காய்ப் பால் - 1 கிண்ணம்
சர்க்கரை - 3/4 கிண்ணம்
இளநீர் - 1/2 கிண்ணம்
வண்ண ஜவ்வரிசி மணிகள் - 1/4 கிண்ணம்
துருவிய மஞ்சள் பூசணிக்காய் (அ) பரங்கிக் காய் - 1 கிண்ணம்
தேங்காய் (துருவியது) - சிறிதளவு
நுங்கு விதை (Palm Seeds) நறுக்கியது - 5 (Asian Food Section-ல் டின்னில் கிடைக்கும்)

செய்முறை
கருப்பு அரிசியை 8-10 மணி நேரம் வரை ஊறவைத்து எடுத்து பரங்கிக்காய் (அ) பூசணிக்காய்த் துருவலை, நீர்த்த தேங்காய்ப் பாலுடன் சேர்த்து குக்கரில் 10 நிமிடம் வேக வைக்கவும். சர்க்கரையைக் கம்பிப் பதத்தில் பாகு காய்ச்சவும். பாகுடன், வேக வைத்து எடுத்தவை மற்றும் கெட்டித் தேங்காய்ப் பால் சேர்த்து அடுப்பில் வைத்துக் கிளறவும். கெட்டியாகி பாத்திரத்தின் பக்கங்களை விட்டு வரும் வரை நன்கு கிளறவும். பிறகு அத்துடன் இளநீர் சேர்த்துக் கிளறவும். ஜவ்வரிசியை தனியாக வேகவைத்து எடுத்துக் கொள்ளவும்.

பரிமாறும் போது சிறிய பாத்திரத்தில் கிளறி வைத்ததைப் போட்டு அதன்மேல் நறுக்கிய நுங்குகளைப் பரத்தி, பிறகு மறுபடியும் புட்டினைப் பரத்தி, ஜவ்வரிசி மணிகள், தேங்காய்த் துருவலால் அலங்கரிக்கவும்.
(கருப்பு அரிசி winco போன்ற கடைகளில் கிடைக்கும்)

ஜானகி கௌதா, ராம்ப்ரியா சுப்ரமணி
தமிழாக்கம்: ஜெயந்தி ஸ்ரீதர், சாக்ரமெண்டோ (கலி.)

© TamilOnline.com