இர்வைன் கோவிலில் கலைநிகழ்ச்சிகள்
கடந்த செப்டெம்பர் 27ம் தேதி லாஸ் ஏஞ்சலஸ் இர்வைன் ஆலயத்துக்கு நிதி திரட்ட நடந்த விழாவில் அனிருத் வெங்கடேஷின் இசைக்கச்சேரியும், சாருலதா ஜெயராமனின் நாட்டியமும் நடைபெற்றன. அனிருத்தின் பாடல்களில் வேங்கடரமண, சரவணபவ குகனே, ஹே கோவிந்தா ஹே கோபாலா பாடல்கள் சிறப்பாக இருந்தன.

அனிருத், ஆசிரியை திருமதி பத்மா குட்டியின் சீடர். சிருஷ்டி பரதநாட்டியப் பள்ளியின் இயக்குனரான கலைமாமணி சாருலதா ஜெயராமனின் நடனத்தில் கீதோபதேசமும், சின்னஞ்சிறு கிளியேவும் குறிப்பிடத்தக்கவையாக அமைந்திருந்தன.

எல்லே சுவாமிநாதன்

© TamilOnline.com