லாஸ் ஏஞ்சலஸ் மலிபு கோவில் நவராத்திரி திருவிழா
செப்டம்பர் 28, 2008 அன்று தொடங்கி லாஸ் ஏஞ்சலஸ் மலிபு கோவிலில் நவராத்திரி விழா கொண்டாடப்பட்டது. கானசரஸ்வதி (கானம்) அவர்கள் பொம்மைகளைப் படிகளில் வைத்து கொலுப்படியை அலங்கரித்தார். கீதா சுவாமிநாதன், ஹேமா ஆகியோர் ரங்கோலி கோலமிட்டிருந்தனர். அன்றும் மறுநாளும் சாஸ்திரி ப்ரசாத் அவர்களின் விசேஷ தேவி மந்திர ஒலி முழங்கியது. இயக்குனர் கானசரஸ்வதி ஒவ்வொரு நாளும் மாலை 6 மணி முதல் 7மணி வரை கச்சேரிகள் ஏற்பாடு செய்திருந்தார்.

சான் பெர்னாண்டோ வேலி வட்டாரத்தைச் சார்ந்த குரு கானசரஸ்வதி, கல்யாணி சதானந்தம், கல்யாணி வீரராகவன், இந்து ஆகியோரது சீடர்களும், கீதா சுவாமிநாதன் அவர்களது ஸ்லோக வகுப்பைச் சேர்ந்த சிறுவர் சிறுமியர்களும், பாலவிஹார் ஆசிரியர்களான சுஜாதா பத்ரிநாத், ரங்கு ராதாக்ருஷ்ணன் ஆகியோரது சீடர்களும் கொலுவின் முன்னிலையில் இறைவனுக்குப் பாமாலை சூட்டிக் களித்தனர்.

க்ருபா

© TamilOnline.com