அக்டோபர் 25, 2008 அன்று கனெக்டிகட் தமிழ்ச் சங்கம் பிரிஸ்டல் சென்ட்ரல் உயர்நிலைப் பள்ளியில் தீபாவளித் திருவிழாவைக் கொண்டாடியது. சங்கத் தலைவர் ஸ்ரீமதி ராகவன் வரவேற்புரை வழங்கினார். இதில் 'அக்னி' குழுவினர் இன்னிசை விருந்து வழங்கினர். நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பல்வேறு மொழி மக்களுக்காகத் தமிழ் தவிரத் தெலுங்கு, ஹிந்தி பாடல்களையும் பாடி மகிழ்வித்தனர். தங்கள் குழுவினருடன், கனெக்டிகட்டைச் சேர்ந்த பாடகர்களையும் இடையிடையே பாடவைத்தது புதுமையான முயற்சி. 'நாக்க முக்க'வுக்கும், 'தாவணி போட்ட தீபாவளி' பாடலுக்கும் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என அரங்கமே ஆடி மகிழ்ந்தது. சங்கத்தின் செயலாளர். ஸ்ரீநி நம்பிராஜனின் நன்றியுரையுடன் இசைவிருந்து முடிந்தது. ஏறக்குறைய 500 பேர் கலந்து கொண்டனர்.
உமா சேகர் |