பாக்ஸ் ஆபிஸ் புரொடக்ஷன்ஸ் சார்பில் எஸ். பாலாஜி முதன்முதலாக மிக பிரமாண்டமாகத் தயாரிக்கும் படம் ஆதிநாராயணா. கஜன் என்ற புதுமுகம் கதாநாயகனாக அறிமுகமாக, அவருக்கு ஜோடியாக மீரா ஜாஸ்மின் நடிக்கிறார். இரண்டாவது கதாநாயகியாக பெங்களூரைச் சேர்ந்த மாடல் ஆழகி யோகிதா அறிமுகமாகிறார். இவர்களுடன் மனோபாலா, விஜய்பாபு, மாணிக்க விநாயகம், 'காதல்' சுகுமார், மயில்சாமி, 'சங்கராபரணம்' ராஜலட்சுமி, குயிலி, ஷோபனா உட்பட பலர் நடிக்கின்றனர். கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார், அறிமுக இயக்குனர் வெற்றிவேந்தன். இசை - ஸ்ரீகாந்த் தேவா. பாடல்கள் - பழனிபாரதி, சினேகன், கபிலன், விவேகா.
அரவிந்த் |