புதுமுகங்கள் நடிக்கும் கார்த்திக் அனிதா
தமிழ் சினிமாவின் இலக்கணமாகத் திகழும் குத்துப்பாட்டு, இரட்டை அர்த்த வசனங்கள், சண்டைக் காட்சிகள், முத்தக் காட்சிகள் போன்ற சமாச்சாரங்கள் இல்லாமல் உருவாக இருக்கும் படம் 'கார்த்திக் அனிதா'. நாயகன், நாயகியாக ரத்தன் - மஞ்சு ஆகிய புதுமுகங்கள் அறிமுகமாகின்றனர். இசையமைப்பாளராக ஜாக் ஆனந்த் அறிமுகமாகிறார். தயாரிப்பு - ஷங்கர் வி. ராஜன். வில்லன் நடிகரான கோட்டா சீனிவாசராவ் இதில் முற்றிலும் மாறுபட்ட மென்மையான தந்தை கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 'இதுவும் ஒரு வழக்கமான காதல் படம் தான். எதிரெதிர் வீட்டில் வசிக்கும் இரண்டு இளசுகளுக்குள் பூக்கும் காதலைப் பற்றியதுதான். ஆனால் கதை சொல்லும் விதம் புதுமையாக இருக்கும்' என்கிறார் இயக்குநர் ஸ்ரீஹரி. அடிப்படையில் ஓவியரான இவர் சுந்தர் சி.யின் உதவியாளர்.

அரவிந்த்

© TamilOnline.com