பாடல் கேசட் விற்பனையில் சாதனை!
எஸ்.ஜே. சூர்யா நடிப்பில் உருவாகி வரும் 'திருமகன்' படத்துக்கான இசையை தேவா அமைத்திருக்கிறார். படத்தில் மொத்தம் ஆறு பாடல்கள். தயாரிப்பாளர் கலைப்புலி தாணு.

பாடல் கேசட் விற்பனையில் இப்படம் புதிய சாதனையை படைத்துள்ளது. இசையமைத்த தேவாவுக்கும், அவரது சகோதரர் முரளிக்கும் எஸ்.ஜே. சூர்யாவும், தயாரிப்பாளர் தாணுவும் சந்தன மாலையும், தங்கச் சங்கலியும் அணிவித்துப் பாராட்டி உள்ளனர்.

ஒரு படத்துக்குப் பின்னணி இசை சேர்க்க அதிகபட்சம் 10 நாட்கள் எடுத்துக் கொள்ளும் தேவா 'திருமகன்' படத்துக்கு 20 நாட்கள் எடுத்துக் கொண்டார் என்பது செய்தி.

கேடிஸ்ரீ

© TamilOnline.com