கவியரசர் வைரமுத்துவின் இளவரசர் கபிலன் வைரமுத்து எழுதிய சிறுகதைகளின் தொகுப்பான 'கதை' சென்னை புத்தகக் கண்காட்சியின் போது திருமகள் பதிப்பகத்தாரால் வெளியிடப்பட்டது. இவரது முதல் நான்கு நூல்களும் கவிதை நூல்கள். இது ஐந்தாவது நூல்.
கபிலனின் எழுத்துக்கள் மு.வரதராசனாருடையதைப் போல இருப்பதாகப் பாராட்டிப் பேசினார் இயக்குநர் சரண். தமிழக நிதியமைச்சர் பேராசிரியர் க. அன்பழகன் தலைமையேற்ற இவ்விழாவில் எழுத்தாளர் சிவசங்கரி, பேரா. கு. ஞானசம்பந்தன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். 'திரைப்படப் பாடல் எழுதும் விருப்பம் எனக்கு என்றைக்குமே இருந்ததில்லை' என்று இங்கே கபிலன் கூறியது குறிப்பிடத் தக்கது. ஆனால், நல்ல சமூக, அரசியல் கொள்கைகளை வலியுறுத்தும், புதிய தலைமுறையை ஆற்றுப்படுத்தும் கதைகளை வெள்ளித்திரைக்கு எடுத்துச் செல்லும் விருப்பம் இருக்கிறது என்கிறார் இந்த 24 வயதுக்காரர். அவருக்கு இதோ, நமது வாழ்த்துக்களும்!
|