கணிதப் புதிர்கள்
1. இரண்டு இலக்க எண் ஒன்றின் தலை கீழ் எண்ணே மற்றொரு எண். அவை இரண்டுக்கிடையேயான வித்தியாசம் 54. அந்த எண் எது? அதுபோன்ற பிற எண்கள் யாவை?

2. வரிசையில் அடுத்து வர வேண்டிய எண் எது, ஏன்?
0, 1, 1, 2, 3, 5, 8...?

3. 21x = 21 + x என்றால் xன் மதிப்பு என்ன?

4. ஒரு கூடையில் சில ஆப்பிள்கள் இருந்தன. அவற்றை இரண்டிரண்டாகக் கூறு செய்தபோது 1 மீதம் இருந்தது. மூன்று மூன்றாகக் கூறு செய்தபோதும் 1 மீதம் இருந்தது. நான்கு நான்காகக் கூறு செய்தபோதும் 1 மீதம் இருந்தது. ஐந்து ஐந்தாகக் கூறு செய்தபோது ஏதும் மிஞ்சவில்லை என்றால் கூடையில் இருந்த ஆப்பிள்களின் எண்ணிக்கை எவ்வளவு?

விடைகள்


அரவிந்த்

© TamilOnline.com