குறுக்காக:
3. கனி கொடு, ராஜா ஆயுதபாணியாய் வந்தால் தேவாலயம் (5)
6. பிரம்மனுடைய பொய்சாட்சி கீழேசெல்ல இறுதியில் பள்ளம் உலகம் (4)
7. அரேபியாவில் தண்டனை நிறைவுபெறாத சையது வெளியே பல்லால் தாக்கு (4)
8. சுந்தரி இடையைத் தழுவும் ராசி மலர்களில் இருக்கும் (6)
13. தூய்மையற்ற, இடையற்ற அனர்த்த மாசு கிளறப்படும் (6)
14. சுற்றிச் சுற்றி வர குழவி நடு (4)
15. அவ்விடம் சுற்றிக் கடைசியாய் ஓட ஆணைக்குக் கட்டுப்படு (4)
16. தினமும் சிக்கிய ஆறு கடைசியில் பேருந்துகள் ஓடா இடம் (5)
நெடுக்காக:
1. சுநயனாவின் வளர்ப்புமகளா? இல்லை மாப்பிள்ளையாம் (5)
2. முழுமையான மலர், பாடலின் பகுதியைச் சிதைத்தது (5)
4. புதல்வியை இழந்த மக்கள் வேட்கை சூழ்ந்த விளைவு (4)
5. அலைகடல் மீது சென்று தேட வேண்டியது முதலிழந்து சிதைந்தெல்லாம் வீண் (4)
9. சுந்தரி, சுந்தரி, நீ வைத்துள்ள நிலத்தில் விவசாயம் செய்ய முடியாது (3)
10. அரசனால் பிரயோஜனமில்லை என்றாலும் ராவணனைக் கொல்வதற்குப் பயன்பட்டது (5)
11. சுழியில்லா உனக்கு வேதம் பொருந்தினாலும் ஆதங்கம் (5)
12. துன்பத்தில் சிக்கி ஏரோட்ட, கன்று தலையின்றி வந்தது (4)
13. கற்ற நெசவாளரின் கருவி படகில்லா அந்தோணி கவிழ்த்தது (4)
'குறுக்கும் நெடுக்கும்' கூகிள் குழுமத்தில் (kurukkum nedukkum@googlegroups.com) இணைய வாரீர்.
இணையத்தில் குறுக்கெழுத்துப் புதிரை உருவாக்கி தங்கள் வலைப்பதிவில் பலரும் வெளியிட ஆரம்பித்துள்ளனர். முன்பே குறிப்பிட்ட இலவசக் கொத்தனார் (elavasam.blogspot.com), யோசிப்பவர் (yosinga.blogspot.com), ஜீவ்ஸ் (kaladi.blogspot.com) ஆகிய மூவர் புதிர்களிலும் அச்செடுக்காமல் வலைப்பக்கத்திலேயே விடைகளை நிரப்பும் தொழில்நுட்ப வசதி இருக்கிறது. ஒவ்வொருவர் கையெழுத்து மாறுபடுவதுபோல் புதிரமைப்பிலும் ஒவ்வொருவர் பாணி மாறுபடுவதைக் காணலாம். இன்னும் பலரும் இம்முயற்சியில் தீவிரமாக இறங்கினால் எல்லோருடைய புதிரும் மெருகேறும். புதிர் ஆர்வலர்களுக்குக் கொண்டாட்டம்தான்.
vanchinathan@gmail.com
நீங்கள் புதிர் மன்னரா?
குறுக்கெழுத்துப் புதிருக்கான சரியான விடைகளை நவம்பர் 15-க்குள் அனுப்பும் முதல் மூன்று வாசகர்களின் பெயர்கள் 'புதிர் மன்னர்கள்' சாதனைப் பட்டியலில் இடம் பெற்று அடுத்த இதழில் வெளிவரும். விடைகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: thendral@tamilonline.com. நவம்பர் 15-க்குப் பிறகு, விடைகளை www.tamilonline.com என்ற சுட்டியில் காணலாம்.
அக்டோபர் 2008 புதிர் மன்னர்கள்
1. ஏ.வி. லக்ஷ்மிநாராயணன், சான்டியாகோ,கலி.
2. வி.ஆர்.பாலகிருஷ்ணன், ஜவஹர்நகர், சென்னை
3. வி.என். கிருஷ்ணன், சான்டா கிளாரா, கலி.
சரியான விடையனுப்பிய மற்றவர்கள்:
ஷீலா கோபால், ஜான்ஸ் க்ரீக், ஜார்.
விஜயா அருணாசலம், ஃப்ரீமாண்ட், கலி.
குன்னத்தூர் சந்தானம், சென்னை
ஸ்ரீதரன் கிருஷ்ணமூர்த்தி, ஃப்ரீமாண்ட், கலி.
ராஜேஷ் கார்கா, எடிசன், நியூ ஜெர்ஸி
சுரேஷ் பாபு, ஷார்ஜா
சுப்ரமணியன் வடக்கன்தரா, மும்பை
எஸ்.பி. சுரேஷ், மயிலை
ஆனந்த் கல்யாணராமன், சான்ஹோசே, கலி.
வி. சந்திரசேகரன், சன்னிவேல், கலி.
பாலாஜி கிருஷ்ணையர், திருபுவனம்
குமார் ராம சுப்ர மணியம், நியூ ஜெர்ஸி.
இவர்களில் முதல் மூவர் சார்பில் அவர்கள் வாழும் பகுதியில் உள்ள தமிழ் மன்றத்துக்குத் தென்றல் தலா 10 டாலர் நன்கொடை வழங்கும். அவர்கள் வாழும் பகுதியில் தமிழ்மன்றம் இல்லாத பட்சத்தில், அவர்கள் விரும்பும் தொண்டு நிறுவனத்துக்குத் தென்றல் நன்கொடை வழங்கும்.