ராகி (கேழ்வரகு) ஓமப்பொடி
தேவையான பொருட்கள்
கேழ்வரகு மாவு - 1 1/2 கிண்ணம்
அரிசி மாவு - 1/4 கிண்ணம்
மைதா மாவு - 1/4 கிண்ணம்
நெய் - 2 தேக்கரண்டி
ஓமம்
(பொடி செய்தது) - 1 தேக்கரண்டி
கார மிளகாய்ப்
பொடி - 1/8 தேக்கரண்டி
பெருங்காயத் தூள் - சிறிதளவு
எண்ணெய் - பொரிக்க

செய்முறை
எல்லாப் பொருட்களையும் ஒன்றாகச் சேர்த்து சற்று கெட்டியாகப் பிசைந்து கொள்ளவும். முறுக்கு அச்சில் ஓமப்பொடி வில்லையைப் போட்டு மிதமாகக் காய்ந்த எண்ணெயில் ஒவ்வொன்றாகப் பிழிந்து இரு பக்கமும் பொன்னிறமாக வெந்த பின் எடுத்து எண்ணெயை வடியுமாறு வைக்கவும்

சரஸ்வதி தியாகராஜன்

© TamilOnline.com