சோயா முறுக்கு
தேவையான பொருட்கள்
அரிசி மாவு (அ)
கடலை மாவு - 1/2கிண்ணம்
சோயா மாவு - 1/2 கிண்ணம்
நெய் - 1 தேக்கரண்டி
மிளகுப் பொடி - 1/8 தேக்கரண்டி
சீரகம் (அ) எள் - 1 தேக்கரண்டி
எண்ணெய் - பொரிக்க
பெருங்காயத் தூள் - சிறிதளவு
உப்பு - தேவைக்கேற்ப

செய்முறை
எல்லாவற்றையும் ஒன்றாகச் சேர்த்து சற்று கெட்டியாகப் பிசைந்து கொள்ளவும். முறுக்கு அச்சில் போட்டு மிதமாகக் காய்ந்த எண்ணெயில் ஒவ்வொன்றாகப் பிழிந்து இரண்டு பக்கமும் பொன்னிறமாக வெந்த பின் எடுத்து வடிய வைக்கவும்.

சரஸ்வதி தியாகராஜன்

© TamilOnline.com