2008 ஆகஸ்ட் 8 முதல் 10 வரை மூன்று நாட்கள் டெட்ராயிட் பெருநில ஷீரடி சாயிபாபா திருக்கோவிலுக்கான தொடக்க விழா விமரிசையாக நடந்தேறியது. முதல் நாளன்று பூஜைகள், கணபதி, வாஸ்து ஹோமம் ஆகியவற்றோடு விழா தொடங்கியது. அன்று காலை 10:00 மணிமுதல் மறுநாள் காலை 10:00 வரை சாயி நாமம் தொடர்ந்து ஜபிக்கப்பட்டது. மாலையில் 108 குடும்பங்கள் ஸ்ரீ சத்தியநாராயண விரதம் அனுஷ்டித்தன.
சனிக்கிழமையன்று ஆரத்தி, லலிதா சஹஸ்ரநாம அர்ச்சனை, லக்ஷ்மி அஷ்டோத் தரம், சாயி சாலிஸா ஆகியவை நடந்தேறின. பின்னர் ஸ்ரீ சாயிபாபாவுக்குப் பல்லக்குச் சேவை நடந்தது. ஸ்ரீ ஷீரடி சாயி சமஸ்தான அறங்காவலர் குழுத் தலைவர் குட்டா வெங்கடேஸ்வர ராவ் எல்லோருக்கும் நன்றி கூறினார்.
அரவிந்த் ரமேஷ் |