லஷ்மிநாராயணா இசைப்பள்ளி பிள்ளையார் சதுர்த்தி
செப்டம்பர் 7, 2008 அன்று லாஸ் ஏஞ்சலஸ் மலிபு கோயிலில் பிள்ளையார்ச் சதுர்த்தியை முன்னிட்டு பிள்ளையாருக்கு அபிஷேகம், அலங்காரம், பூஜை ஆகியன நடைபெற்றது.

அன்று மதியம் லக்ஷ்மிநாராயணா இசைப்பள்ளி இயக்குனர் கானசரஸ்வதியும் அவர்களது மாணாக்கர்களும் இன்னிசையால் பிள்ளையாரைக் குளிரவைத்து ரசிகர்களை களிக்கச் செய்தனர். சக்திசுந்தர் மங்களகர நாதஸ்வர வாத்திய குழுவைச் சேர்ந்த பேஸ் கிளாரினட்டும் லியோனஸ் ஷின்மன் தவிலும் வாசிக்க, பிள்ளையார் சதுர்த்தி இசைவிழா தொடங்கியது. தொடர்ந்து நிகிதா, ப்ரணிதா, மைதிலி, மஹாதேவ், பிரகாஷ், லீனா, சக்திசுந்தர், வர்ஷா, ஸுஜிதா, பூஜா, சங்கீதா, ரம்யா, சர்வேஷ், உமா, கீதா ஆகியோர் பிள்ளையார், தேவியர் உள்ளிட்ட தெய்வங்களுக்கு இசைமாலை சார்த்தினர்.

சங்கீதா அம்மன்மீது மனமுருகி 'கருணைத் தெய்வமே', 'கருணை செய்ய தாமதம் ஏனோ' பாடல்களைப் பாடி கரகோஷம் பெற்றார். வைத்தியநாதனின் கிதார் இசை அற்புதம். இசைப்பள்ளி இயக்குனர் கானசரஸ்வதியும் அவரது மகள் சங்கீதாவும் சிறப்பான பக்திப் பாடல்களைப் பாடினர். ஸ்ரீனிவாசன் (மிருதங்கம், கஞ்சீரா), லியொனஸ் ஷின்மன் (தவில், தபேலா, கடம்), சுந்தர் (டேம் போரின்) வாசித்தனர். முடிவில் நாமாவளிகளை அனைவரும் சேர்ந்து பாடினர். குருவாயூரப்பன் மங்களத்துடன் நிகழ்ச்சி இனிது முடிவடைந்தது.

தமிழ்ச்செல்வி

© TamilOnline.com