நியூ இங்கிலாந்து தமிழ்ச்சங்கம் NETS Talent Show, திருக்குறள் ஒப்பித்தல் போட்டி
நியூ இங்கிலாந்து தமிழ்ச்சங்கம் நவம்பர் 15ம் நாள் Keefe Tech High school, Framingham-ல் இந்தியக் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, குழந்தைகளின் திறமைகளை ஊக்குவிக்கும் வகையில் NETS Talents Show-2008 மற்றும் திருக்குறள் ஒப்புவித்தல் போட்டியை நடத்த உள்ளது.

இதில் ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு மாறுவேடப் போட்டியும், ஐந்து வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மாறுவேடப் போட்டி மற்றும் பிற தனித்திறமையை வெளிப்படுத்தும் திறனறி போட்டிகளும் நடைபெற உள்ளன.

மேலும் உலகப் பொதுமறையான திருக்குறளின் மீது ஆர்வத்தை வளர்க்கும் விதமாக 4-18 வயதினருக்கு, வயதின் அடிப்படையில் பல்நிலை திருக்குறள் ஒப்பித்தல் போட்டியும் நடைபெறும்.

நாள்: நவம்பர் 15, சனிக்கிழமை
நேரம்: 3:30 PM
இடம்: Keefe Tech High School
Framingham, Massachussets

பூங்கோதை கோவிந்தராஜ்

© TamilOnline.com