சான் பிரான்சிஸ்கோ வளைகுடாப் பகுதித் தமிழ் மன்றம் வரவிருக்கும் நிகழ்ச்சிகள்
வளைகுடாப் பகுதித் தமிழ் மன்றம் அடுத்த இரண்டு மாதங்களில் அளிக்கவிருக்கும் நிகழ்ச்சிகள்:

2009-ம் ஆண்டு செயற்குழுத் தேர்வு

2009-ம் ஆண்டுக்கான தமிழ்மன்றத்தின் செயற்குழுத் தேர்வு அக்டோபர் 25, 2008 அன்று நடக்க இருக்கிறது. தமிழ் மன்றத் தலைவர், உபதலைவர் (நிர்வாகம்), உபதலைவர் (கலை), பொருளாளர், செயலாளர், அமைப்பாளர் ஆகிய பதவிகளுக்கான தேர்தல் நடத்தப்படும். செயற்குழுத் தேர்தலில் போட்டியிட விரும்புவோர் தமிழ் மன்றச் செயலாளர் மகேஷ் ஸ்ரீனிவாசன் அவர்களை srsmahesh@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியிலோ, அல்லது 408.757.7833 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம். தமிழ் மன்ற உறுப்பினர்கள் அனைவரும் நேரில் வந்து தேர்தலில் வாக்களிக்க வேண்டப்படுகிறார்கள்.

'பூந்தளிர் கூட்டம்' - குழந்தைகள் தினவிழா போட்டிகள்

நவம்பர் 15, 2008 அன்று குழந்தைகள் தினம் பூந்தளிர் கூட்டமாக நடைபெற இருக்கிறது. நடனம், இசை, பேச்சு, ஓவியம், வண்ண உடைகள் என்று பல போட்டிகள் நடக்க இருக்கின்றன. இப்போட்டிகளில் கலந்து கொள்வதற்கான விதிமுறைகள், எவ்வாறு விண்ணப்பிக்கலாம் போன்ற விவரங்கள் தமிழ் மன்ற இணையதளத்தில் www.bayareatamilmanram.org காணக் கிடைக்கும். மேலும் கேள்விகள் இருந்தால் சித்ரா ராஜசேகரன் அவர்களை 510.378. 4799 என்ற தொலைபேசி எண்ணிலோ, அல்லது children@bayarea tamilmanram.org என்ற மின்னஞ்சல் முகவரியிலோ தொடர்பு கொண்டு அறியலாம்.

ராகலயாவின் 'அமர்க்களம்'

காலையில் குழந்தைகள் தினம், மாலையில் பெற்றோருக்கும், உற்றாருக்கும் கொண்டாட்டம்! நவம்பர் 15, 2008 அன்று மாலை 5:30 மணிக்கு 'ராகலயா' இசைக்குழுவினர் வழங்கும் 'அமர்க்களம்' தமிழ் இன்னிசை நிகழ்ச்சி நடக்க இருக்கிறது. வளைகுடாப் பகுதியின் திறமைவாய்ந்த இசை, நடனக் கலைஞர்கள் இணைந்து செவிக்கும், கண்களுக்கும் விருந்து படைக்கிறார்கள். மேலும் விவரங்கள் அறியவும், இணையம் வழியாக நுழைவுச் சீட்டு வாங்கவும்: www.bayareatamilmanram.org

பத்மஸ்ரீ கிருக்ஷ்ணம்மாள் ஜகன்னாதன் அவர்களுக்கு வரவேற்பு

காந்தீய வழியில் வாழும் திருமதி. கிருஷ்ணம்மாள் ஜகன்னாதன் அவர்களுக்கு நவம்பர் 9, 2008 அன்று தமிழ் மன்றம் வரவேற்பு அளிக்க இருக்கிறது. இவர் தாழ்த்தப் பட்டோரின், முக்கியமாக ஏழைப் பெண்களின், வாழ்க்கை முன்னேறத்திற்காக தனது வாழ்வை அர்ப்பணித்துக் கொண்டவர். 'உழுபவருக்கே நிலம்' (LAFTI) என்ற அமைப்பை ஏற்படுத்தி இந்தியாவில் தொண்டு புரிந்து வருகிறார். LAFTI அமைப்பு, வரவேற்பு விழா ஆகியவற்றைப் பற்றி மேலும் அறிய: www.bayareatamilmanram.org.

© TamilOnline.com