நாடக வழங்கும் Final Solutions
சான் பிரான்சிஸ்கோ விரிகுடாப் பகுதியின் பிரபல நாடகக் குழுவான நாடக் (Naatak) தனது 28வது தயாரிப்பான Final Solutions என்ற ஆங்கில நாடகத்தை அக்டோபர் மாதம் 3 நாட்கள் பாலோ ஆல்டோவிலுள்ள கபர்லி அரங்கில் வழங்குகிறது.

சாஹித்ய அகாதமி விருதுபெற்ற மஹேஷ் தத்தானி எழுதிய இந்த நாடகம் இந்து-முஸ்லிம் கலவரத்தின் வேரைத் தேடுகிறது. மதக்கலவரச் சமயத்தில் ஒரு குஜராத்திக் குடும்பம் இரண்டு முஸ்லிம் இளைஞர்களுக்கு அடைக்கலம் கொடுக்கிறது. இதையும் 1947ல் நடந்தவற்றையும் மாற்றி மாற்றி அலசுவதன் மூலம் கதை மிகக் கடினமான விவாதத்தைத் தோற்றுவித்து விடை காண முயற்சிக்கிறது.

இந்த நாடகத்தின் இயக்குனரான ஹரிஷ் சுந்தரம் அகஸ்த்யா ஒரு தமிழர். நாடகக்குழுவைத் தோற்றுவித்தவர்களில் ஒருவர். நடிகர், இயக்குனர், கலை இயக்குனர், ஒளியமைப்பாளர் என்று பல்வேறு பொறுப்புகளை இவர் முன்னர் ஏற்றுச் செய்திருக்கிறார்.

ஹிந்தி, தமிழ், ஆங்கிலம் ஆகியவற்றில் இதுவரை 27 நாடகங்களை வழங்கியுள்ள நாடக், 501c(3) பிரிவின்கீழ் வரிவிலக்குப் பெற்றது. இந்த அமைப்பைக் குறித்து மேலும் அறிய: www.naatak.com

நேரம்:
அக்டோபர் 11, மாலை 8:00 மணி
அக்டோபர் 12 மாலை 5:00 மணி
அக்டோபர் 17 மாலை 8:00 மணி

டிக்கெட்டுகள் வாங்க:

இணையத்தில்: www.naatak.com

மின்னஞ்சல்: tickets@naatak.com

தொலைபேசி: சௌம்யா - 408.425.2647

சௌம்யா

© TamilOnline.com