வாமனன் ஜெய்
'பருத்தி வீரன்' கார்த்தி, ரீமாசென், ஆண்ட்ரியா நடிக்கும் 'ஆயிரத்தில் ஓருவன்' படத்தையடுத்து ட்ரீம்வேவ் கார்ப்பரேஷன் பட நிறுவனம் தயாரிக்கும் புதிய படம் 'வாமனன்'. இதில் ஜெய் கதாநாயகனாக நடிக்கிறார். சென்னையைச் சேர்ந்த விளம்பர மாடல் ப்ரியா கதாநாயகியாக நடிக்கிறார். இவர்களுடன் ஊர்வசி, லக்ஷ்மிராய், சந்தானம், சம்பத் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். இயக்குநர் கதிரிடம் உதவியாளராகப் பணியாற்றிய அஹமத், கதை, திரைக்கதை, வசனம் எழுதிப் படத்தை இயக்குகிறார்.

தொகுப்பு: அரவிந்த்

© TamilOnline.com