மணீஷ் பரத்வாஜ், 34 வயதான மென்பொருள் பொறியாளர். ஒரு Semiconductor கம்பெனியில் வேலை. 5 வயதில் ஒரு பெண். ஆண் குழந்தைக்கு வயது 1.
சென்ற ஜூலை மாதத்தில் இவருக்கு ரத்தப் புற்றுநோய் இருப்பதாகக் கண்டுபிடிக்கப்பட்டது. Acute Myeloid Leukemia. இவருக்கு உயிர்காக்கும் ஒரே சிகிச்சை எலும்பு மஜ்ஜை மாற்றுச் சிகிச்சை (Bone marrow transplant).
மணீஷைப் போலவே AML புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, எலும்பு மஜ்ஜை சிகிச்சைக்காகக் காத்திருக்கும் பல இந்தியர்கள் இருக்கின்றனர். நாம் இவர்களுக்கு எலும்பு மஜ்ஜை தருவதன் மூலம் உதவமுடியும். உயிர் கொடுக்க முடியும்.
மஜ்ஜை கொடை கொடுத்தோருக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படுவதில்லை. கொடுப்பவரின் திசுக்கள் நோயாளியின் திசுவுடன் ஒத்திருக்க வேண்டுமென்பது (Tissue Matching) அடிப்படைத் தேவை. இந்த ஒற்றுமை இருப்பதற்கான வாய்ப்பு, ஒரே இனத்தைச் சேர்ந்தவர்களிடம் அதிகம். ஆகவே நம் ஒவ்வொருவருக்கும் நம் இனத்தை சேர்ந்த இன்னொருவரின் உயிர் காப்பதில் கடமையும் பங்கும் உள்ளது.
எலும்பு மஜ்ஜை தேவைக்கேற்ப நம் உடலில் தானாகவே உற்பத்தியாகிறது. நமக்கு எந்த பாதிப்புமின்றி, இந்தக் கொடையின் மூலம் மற்றவர் உயிர் காப்பதில் ஏற்படும் மகிழ்ச்சியையும் நிறைவையும் எண்ணிப்பாருங்கள். இந்தியர் ஒவ்வொருவரும் இந்த இயக்கத்தில் சேர ஒப்புதல் அளிக்குமாறு வேண்டுகிறோம். இதன்மூலம் இந்த இயக்கம், ஒரு நாள் நமக்கோ நமது அன்பிற்குரியவர்க்கோ கூட உதவிக்கரம் அளிக்கலாம்.
மேலும் விபரங்களுக்கு: www.lifeformanish.org
வைத்யநாதன், ஆஸ்டின், டெக்ஸஸ் |