யார் இவர்?
அந்தச் சிறுவனின் வீட்டில் எல்லோரும் சங்கீதத்தில் அளவற்ற ஆர்வம் உடையவர்கள். தந்தை சிறந்த ஹரிகதா வித்வான். சகோதர, சகோதரிகளும் சங்கீதத்தில் கெட்டிக்காரர்கள். ஆனால் அந்தச் சிறுவன் மட்டும் விதிவிலக்கு. ஆடிப் பாடுவதும், கோவிலுக்குப் போவதும், பஜனை கோஷ்டிகளோடு சேர்ந்து ஊர் சுற்றிக் கொண்டிருப்பதும்தான் அவனது பொழுதுபோக்கு.

ஒருநாள், சரியாகக் கச்சேரிக்கு வராத வயலின்காரரை அந்தச்சிறுவனது தந்தை கடிந்து பேச, அவரோ எகத் தாளமாக, 'என்னை விட்டா வேற யாரு வந்து உமக்கு வாசிப்பார்?' என்று கிண்டலாகக் கூறினார். தந்தைக்கு அளவற்ற கோபம் வந்து விட்டது. கதவோரம் நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த சிறுவனின் கையைப் பிடித்து இழுத்து, 'சங்கீதமே தெரியாத இவனை மிகப்பெரிய வித்வானா ஆக்கிக் காட்டறேன் பார்' என்று சவால் விட்டார்.

சவால் விட்டதுமல்ல. ஒரே வருடத்திற்குள் அதை சாதித்தும் காட்டினார். தன் மகனை மிகச் சிறந்த வித்வானாக ஆக்கியதுடன், பிரபல இசை மேதைகளால் பாராட்டப்படுமளவுக்கு அவனை உயர்த்தினார். பிற்காலத்தில் புகழ்பெற்ற வித்வானாக விளங்கிய அந்தச் சிறுவன், பாமர மக்களிடையேயும் இசையைக் கொண்டு சேர்த்தான். அவனது தந்தை உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த போது, அசுர சாதகம் செய்து அவர் உயிரைக் காப்பாற்றினான். பிற்காலத்தில் மிகச் சிறந்த இசை மேதையாகப் போற்றப்பட்ட அந்த ஜனரஞ்சக இசைக்கலைஞர் யார்?

விடை


© TamilOnline.com