1. 23, 45, 89, 177, ?
இந்த வரிசையில் அடுத்து வர வேண்டிய எண் எது, ஏன்?
2. 8723, 3872, 2387, ?, ......
இந்த வரிசையில் அடுத்து வர வேண்டிய எண் எது, ஏன்?
3. 7, 5, 8, 4, 9, 3....
அடுத்து வர வேண்டிய எண் எது, ஏன்?
4. இரண்டு எண்களை ஒன்றோடு ஒன்று பெருக்கினாலும், ஒன்றுடன் ஒன்றைக் கூட்டினாலும் வரும் விடை சமமாகவே
இருக்கும் என்றால் அந்த எண்கள் யாவை?
விடைகள்
விடைகள்
1. அடுத்து வர வேண்டிய எண் 353. (n x 2) - 1 என்ற விதி இங்கு பின்பற்றப்பட்டுள்ளது. அதன் படி, (23 x 2) - 1 = 45;
(45 x 2) -1 = 89;
(89 x 2) -1 = 177. எனவே அடுத்து வர வேண்டியது
(177 x 2) -1 = 353.
2. 8723--யின் இறுதி எண்ணான 3, முதல் எண்ணான 8-முன் சென்று இணைந்து 3872 ஆகிறது.
அடுத்து 2387 ஆகிறது.
ஆக இந்த வரிசையில்
அடுத்து வர வேண்டியது 7238.
3. அடுத்து வர வேண்டிய எண் 10. காரணம் ஒன்றுவிட்ட இலக்கங்கள் ஒன்றிற்கொன்று ஏறுவரிசையாகவும், இறங்குவரிசையாகவும் அமைந்துள்ளன. 7, 8, 9 என ஏறுவரிசையிலும், 5,4,3 என இறங்குவரிசையிலும் எண்கள் அமைந்துள்ளன. எனவே ஏறுவரிசையில் அடுத்து தொடர வேண்டிய எண் 10.
4. அந்த எண்கள் 3, 1.5
கூட்டல் = 3 + 1.5 = 4.5
பெருக்கல் = 3 x 1.5 = 4.5