பூரி லாடு
தேவையான பொருட்கள்
மைதா மாவு அல்லது
கோதுமை மாவு - 1கிண்ணம்
பொடித்த சர்க்கரை - 1கிண்ணம்
வறுத்து ஒடித்த
முந்திரிப் பருப்பு - சிறிதளவு
ஏலப்பொடி - 2 சிட்டிகை

செய்முறை
உப்பு சேர்க்காமல் மாவை கெட்டியாகப் பிசைந்து பூரி செய்வதுபோலச் செய்யவும். பூரிகளைச் சற்று கரகரப்பாகப் பொரித்து எடுக்கவும்.

இது ஆறியபின்னர் இவற்றை ஒடித்து மிக்ஸியில் போட்டுப் பொடித்துக் கொள்ளவும். இந்தp பொடியை ஒரு வாயகன்ற பாத்திரத்தில் போட்டு மற்ற பொருட்களையும் சேர்த்துக் கலந்து சிறிய உருண்டைகளாக உருட்டவும். உருட்ட வரவில்லையெனில் சிறிது பால் சேர்த்து உருட்டவும்.

சரஸ்வதி தியாகராஜன்

© TamilOnline.com