தேவையான பொருட்கள் இனிப்பூட்டிய கண்டென்ஸ்ட் பால் - 1 டப்பா மாம்பழக் கூழ் - 2 கிண்ணம் பால் பவுடர் - 1 மேசைக்கரண்டி
செய்முறை அடி கனமான, வாயகன்ற பாத்திரத்தில் எல்லாப் பொருட்களையும் சேர்த்து நன்றாகக் கலந்து மிதமான தீயில் வைத்து நன்றாகக் கிளறவும். ஒன்று சேர்ந்து வரும் போது அடுப்பிலிருந்து இறக்கி அதிகம் ஆறவிடாமல் சிறு உருண்டைகளாக உருட்டி வைக்கவும்.
அதிக இனிப்பு தேவைப்பட்டால் வேண்டிய அளவு சர்க்கரை சேர்த்துக் கிளறலாம். சுவையாக இருக்கும்
சரஸ்வதி தியாகராஜன் |