தேவையான பொருட்கள் பன்னீர் - 1 கிண்ணம் பால்பவுடர் - 1/4 கிண்ணம் குறுக்கிய பால் - 1 மேசைக்கரண்டி உலர் தேங்காய்த் துருவல் - 2 மேசைக்கரண்டி பொடித்த சர்க்கரை - 1/2 கிண்ணம் ஏலப்பொடி - 1/4 தேக்கரண்டி
செய்முறை பன்னீரை பொடியாகத் துருவிக்கொள்ளவும் அல்லது கையால் நன்கு கட்டியாக இல்லாமல் உதிர்த்து ஒரு வாயகன்ற பாத்திரத்தில் போட்டு இதனுடன் எல்லாப் பொருட்களையும் சேர்த்து ஒன்றாகக் கலந்து கொள்ளவும். பின்னர் நன்றாக அழுத்திப் பிடித்து சிறிய உருண்டைகளாக உருட்டி வைக்கவும்.
சரஸ்வதி தியாகராஜன் |